கல்முனை வர்த்தகர்களுக்கு மாநகர முதல்வர் விடுக்கும் விசேட அறிவித்தல்

எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பொது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் மூடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018--04-10 ஆம் திகதிய 2066/17 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரிகைக்கு அமைவாகவே அவர் இந்த விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கல்முனை வர்த்தகர்களுக்கு மாநகர முதல்வர் விடுக்கும் விசேட அறிவித்தல் கல்முனை வர்த்தகர்களுக்கு மாநகர முதல்வர் விடுக்கும் விசேட அறிவித்தல் Reviewed by Vanni Express News on 5/05/2018 03:13:00 PM Rating: 5