ரமழான் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு

ரமழான் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு நாளை புதன்கிழமை (16) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிறை குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன் ஹனபி பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் மாநாட்டு தலைவரினால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும். அதேவேளை ஊர்ஜிதமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர். 
ரமழான் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு ரமழான் மாத தலைப்பிறை தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு Reviewed by Vanni Express News on 5/15/2018 04:59:00 PM Rating: 5