நீர்க் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் ரவூப் அதிரடி

நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, நீர்க்கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் இடம்பெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர்க் கட்டண அதிகரிப்பு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனினும், அதனை இப்போது மேற்கொள்வதா? இல்லையா? என்பதை அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ஆண்டுகளாக நீர்க்கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், நீர்வழங்கல் சபை நிதி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நீர்க் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் ரவூப் அதிரடி நீர்க் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் ரவூப் அதிரடி Reviewed by Vanni Express News on 5/05/2018 03:57:00 PM Rating: 5