எரிபொருள் விலை அதிகரிப்பு - முச்சக்கரவண்டி பயணக் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி , முதல் கிலோமீற்றருக்கு 50 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் நாளை முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரட்ன இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒக்டேய்ன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 117 ரூபாவாக இருந்த ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 137 ரூபாவாகும்.

முன்னதாக ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 128 ரூபாவாக காணப்பட்டதுடன், புதிய விலை அதிகரிப்புக்கு அமைய அதன் புதிய விலை 148 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒன்றின் விலை 14 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 95 ரூபாவாக காணப்பட்ட ஒட்டோ டீசல் ஒன்றின் புதிய விலை 109 ரூபாவாகவும்,110 ரூபாவாக காணப்பட்ட சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணைய் 57 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில் அதன் புதிய விலை 101 ரூபாவாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு - முச்சக்கரவண்டி பயணக் கட்டணமும் அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்பு - முச்சக்கரவண்டி பயணக் கட்டணமும் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 5/10/2018 10:37:00 PM Rating: 5