பட்டப்பகலில் வீடு புகுந்து நடன ஆசிரியை மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. 

மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். 

அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான நேற்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது. 
பட்டப்பகலில் வீடு புகுந்து நடன ஆசிரியை மீது வாள்வெட்டு பட்டப்பகலில் வீடு புகுந்து நடன ஆசிரியை மீது வாள்வெட்டு Reviewed by Vanni Express News on 5/01/2018 10:47:00 PM Rating: 5