நீண்ட விசாரணைகளின் பின்னர் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை

பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

கடந்த 2010 ஆண்டு 8.3 கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி முதல் டிசம்பர் 28ம் திகதி வரையான காலத்தில் இலங்கைக்கு கிழங்கு கொண்டு வந்த கொள்கலனில் மறைத்து ஹெரோய்ன் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜையான செய்ட் மொஹமட் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீண்ட விசாரணைகளின் பின்னர் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
நீண்ட விசாரணைகளின் பின்னர் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை நீண்ட விசாரணைகளின் பின்னர் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை Reviewed by Vanni Express News on 5/11/2018 03:28:00 PM Rating: 5