வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 10 வயதுடைய பாடசாலை மாணவி பலி

பஸ்ஸர, மெதவல பகுதியில் அடை மழையுடன் ஏற்பட்ட வௌ்ளத்தில் அடித்துச்சென்று 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மெதவெலகம பாடசாலையில் 5 தரத்தில் கல்வி கற்கும் மெதவெல, எகொடகம பகுதியை சேர்ந்த நிம்சரணி ரஸ்மிதார எனும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நேற்று (12) மாலை 3 மணியளவில் குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வௌ்ளத்தினால் இவர்கள் இருவரும் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாயை காப்பாற்றியுள்ளதுடன் குறித்த சிறுமி உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 10 வயதுடைய பாடசாலை மாணவி பலி வௌ்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 10 வயதுடைய பாடசாலை மாணவி பலி Reviewed by Vanni Express News on 5/13/2018 11:02:00 PM Rating: 5