பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு - 1800 காயம்

கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காஸா எல்லைப்பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என இஸ்ரேல் அரசின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. ஆனால், இதை பொருட்படுத்தாமல் காஸா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று திரண்டனர். 

கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 1800 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீனம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு மக்கள் மீது இன அழிப்பு தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒருமாதத்துக்குள் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு - 1800 காயம் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு - 1800 காயம் Reviewed by Vanni Express News on 5/14/2018 11:33:00 PM Rating: 5