மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மிளகாய் தூள் வீசி கழுத்தை அறுத்து கொலை

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று (17) காலை இந்த சடலம் வெல்லவாய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது முகத்திற்கு மிளகாய் தூள் வீசப்பட்டு பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வெஹரயாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்ற தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபருக்கு ஒரு வயதுடைய சிறிய ஆண் குழந்தை ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகநபர்களை தேடி வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மிளகாய் தூள் வீசி கழுத்தை அறுத்து கொலை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மிளகாய் தூள் வீசி கழுத்தை அறுத்து கொலை Reviewed by Vanni Express News on 5/17/2018 11:05:00 PM Rating: 5