பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இளம் மாணவர்கள் கூட துப்பாக்கியைப் பயன்படுத்துவது தொடர்ந்தும் விவாத அளவிலேயே உள்ளது. 

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே உள்ள ஒரு பாடசாலையினுல் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த தாக்குதலில் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியவாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சந்தேக நபரையும் வளைத்து பிடித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் அதே பாடசாலையின் மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. 

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி Reviewed by Vanni Express News on 5/18/2018 11:01:00 PM Rating: 5