சிலாவத்துறை மக்களின் வீட்டுத்திட்டத்தை தடுத்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி !!!

-எ.எம் .றிசாத் 

வடக்கில் தமிழ் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதை முஸ்லிம் மக்கள் தடுக்கவில்லை.அதேநேரம் முஸ்லீம் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதை ஏன் தமிழ் அரசியல் தலைமைகள் தடுக்கின்றனர்.

1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பாசிச விடுத்தலைப்புலிகள் வெளியேற்றினர் முஸ்லிம் மக்கள் விரும்பி சொந்த மண்ணில் இருந்து இடம்பெயரவில்லை வெளியேற்றத்தின் பின்பு அகதிகளாக புத்தளம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவளங்களோடு வாழ்ந்து வந்தனர்....

யுத்தம் முடிந்ததன் பின்னர் சொந்த மண்ணில் மிள் குடியேறி வருகின்ற நிலையில் வடக்கை ஆளும் தமிழ் கூட்டமைப்பினர் எந்த உதவியும் செய்ய வில்லை செய்யும் மனநிலையிலும் அவர்கள் இல்லை..

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது கொண்ட அரசியல் போட்டி காரணமாக அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை இனவாத கண்கொண்டு பார்க்கும் இந்த கூட்டமைப்பின் வன்னி முகவர்கள் அந்த மக்களை அடிமைப்படுத்த நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்....

இந்த கூட்டமைப்பினர் வடக்கு மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் யுத்தம் முடிந்து எத்தனை வருடங்கள் கடந்திருக்கிறது. முட்கம்பி வேலிக்குள் இருந்த மக்களை சொந்த இடத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தார்களா எதையும் செய்யாத இந்த கூட்டமைப்பு வன்னி முகவர்கள் சார்ள்ஸ் போன்ற இனவாதத்தின் மூலம் அரசியல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதை தடுக்க இனவாதத்தை விதையாக்கியுள்ளனர்....

அந்த விதை சிலாவத்துறை வீட்டுத்திட்டத்தை தடுத்து அந்த நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்துள்ளனர்.

அன்பான தமிழ் உறவுகளே உங்களுக்கு நாங்களோ எங்களுடைய தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனோ எதிரிகள் அல்ல உங்களோடு இணைந்து வாழ ஆசைப்படும் மக்கள் நாங்கள் எங்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினார்கள் அதற்காக நாங்கள் தமிழ் மக்களுடன் கோபப்படவே சன்டையிடவே இல்லை இப்படி இருக்கும் சமூகத்திடம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் இந்த சார்ள்ஸ் போன்ற அரசியல்வாதிகளை இனியும் நம்பி  பின் தொடர்வதா சிந்தியுங்கள்....

அன்பான உறவுகளே சிந்தியுங்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த காலத்திலும் இன்றும் தன்னால் முடிந்த உதவிகளை இனப்பாகுபாடு அற்ற முறையில் செய்துவருகிறார் இந்த முறையில் தமிழ் தலைமைகள் செய்ததாக இல்லை.. பின்னால் இருந்து தூண்டிவிடும் கேவலமான செயலை செய்துவருகின்றனர்....

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உலக நாடுகளில் சென்று மக்களுக்கு வீடுகளை கொண்டு வந்து வன்னியில் உள்ள மக்களுக்கு சரியாக வழங்கிவரும் நிலையில் எதையும் செய்யாத இந்த வேண்டாத கூட்டமைப்பு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் சிலாவத்துறை முஸ்லிம் மக்களுக்கு வழங்கிறார் என இனவாதத்தை தூண்டி விட்டு அதை தடுத்ததும் இல்லாமல் அதை நான்தான் தடுத்தேன் என சொல்லும் இந்த சார்ள்ஸ் எப்படி ஒற்றுமையான சமூகத்தை வழிநடத்தி சொல்லப்போகிறார் பிரிவினை மூலம் அரசியல் செய்யும் இவர் அகிம்சை அரசியலை விட்டு அடாவடி அரசியலை அரங்கேற்றி வருகிறார் என்பது தன்  உண்மை....

அன்பான தமிழ் உறவுகளே ஒற்றுமையாக வாழ விரும்பும் சமூகத்திடம் பிரிவினை ஏற்படுத்த துடிக்கும் இந்த இனவாதிகளின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்போம்....
சிலாவத்துறை மக்களின் வீட்டுத்திட்டத்தை தடுத்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி !!! சிலாவத்துறை மக்களின் வீட்டுத்திட்டத்தை தடுத்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி !!! Reviewed by Vanni Express News on 5/22/2018 10:36:00 PM Rating: 5