நிபா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். 

இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 தாதிகள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. 

முதல் கட்டமாக 50 டோசோஜ் மருந்துகள் வந்துள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நிபா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நிபா காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
நிபா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு நிபா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு Reviewed by Vanni Express News on 5/29/2018 10:55:00 PM Rating: 5