பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்த ஆறுபேர் 8 மாத குழந்தையை கடத்திய சம்பவம்

வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத சிசுவைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

வேன் ஒன்றில் வந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து சிசுவைக் கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

வசுதரன் வானிஷன் என்ற சிசுவே கடத்தப்பட்டுள்ளதுடன், குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முரண்பாடு காரணமாக தந்தையின் குழுவினரால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார். 

கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்த ஆறுபேர் 8 மாத குழந்தையை கடத்திய சம்பவம் பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்த ஆறுபேர் 8 மாத குழந்தையை கடத்திய சம்பவம் Reviewed by Vanni Express News on 5/31/2018 03:27:00 PM Rating: 5