பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்த ஆறு வயதுடைய துளங்சா விக்ரமசிங்க

இந்த ஆண்டு முதல் ஒரு பாடசாலை செல்ல ஆரம்பிக்க வேண்டி இருந்தும் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ள சிறுமி தொடர்பான செய்தி ஒன்று இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

ஆறு வயதுடைய குறித்த சிறுமி தொடர்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

பாடசாலைக் கல்வியைப் பெற வேண்டிய வயதை எட்டியுள்ள துளங்சா விக்ரமசிங்க என்ற சிறுமி தற்போது கல்வியின்றி வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்தச் சிறுமி இரத்தினபுரியின் மத்தியில் நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள போதிலும் நகரிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

யுத்த சமயத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரரான சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்த ஆறு வயதுடைய துளங்சா விக்ரமசிங்க பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்த ஆறு வயதுடைய துளங்சா விக்ரமசிங்க Reviewed by Vanni Express News on 5/04/2018 05:30:00 PM Rating: 5