காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன்

தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ. 

இவர் 28 வயதான Yee-min Huang என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹுவாங் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாக கேரி சூவுக்கு சந்தேகம் எழுந்தது. 

தமது காதலி தம்மை ஏமாற்றி வருவதாக கருதி ஆத்திரம் கொண்ட கேரி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 19 ஆம் திகதி அவரது குடியிருப்புக்கு சென்ற கேரி, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர் உடலை 7 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டியுள்ளார். இதனை நள்ளிரவு கடந்த நேரம் அருகாமையில் உள்ள பூந்தோட்டத்தில் மறைவு செய்துள்ளார். 

இதனிடையே ஹுவாங்கின் சகோதரர் தமது சகோதரியை இரண்டு நாட்களாக காணவில்லை என பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் கேரி மீது சந்தேகம் உள்ளது எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கண்காணிப்பு கெமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். 

அதில் கடந்த 20 ஆம் திகதி கேரி பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. 

மட்டுமின்றி அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தமது காதலி தம்மை ஏமாற்றியதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்துள்ளார். 

தொடர்ந்து பூங்காவில் இருந்து 7 பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றிய பொலிசார், தைவான் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனை அருகே கேரியின் தற்கொலை செய்த உடலையும் மீட்டுள்ளனர்.
காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் Reviewed by Vanni Express News on 5/29/2018 11:28:00 PM Rating: 5