தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு - பொலிஸார் அதிர்ச்சி தகவல்

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்திற்கு பிறகு டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இருப்பினும் அங்கு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக டெல்லி பொலிஸார் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளனர். 

அதன் விவரம் பின்வருமாறு : இந்த ஆண்டின் முதல் 3½ மாதங்களில் மட்டும் தினமும் 5 க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர். 

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரை 578 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 563 கற்பழிப்பு வழக்குள் பதிவாகி இருந்தன. 

மேலும் இதே கால கட்டத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 883 வழக்குகளும், கடந்த ஆண்டில் 944 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 49 கற்பழிப்பு வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 64 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு - பொலிஸார் அதிர்ச்சி தகவல் தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு - பொலிஸார் அதிர்ச்சி தகவல் Reviewed by Vanni Express News on 5/07/2018 04:11:00 PM Rating: 5