17 முறை சீரழிக்கப்பட்ட சிறுமி - காலியில் பதிவாகிய அதிர்ச்சி சம்பவம்

17 முறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியொருவர் தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது.

இந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானமை தொடர்பில் தற்போது பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, மொரவக நீதவான் நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகளும், உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் சிறுமி இறுதியாக தங்கியிருந்த சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த வேளை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிய சிறுமி கொழும்பு பகுதிக்கு வந்துள்ளார்.

இதன்போது இளைஞர் ஒருவர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பெண்ணொருவரின் ஊடாக அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தான் பணிபுரியும் இடத்தில் இருந்து இது தொடர்பில் தனது தாயிக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பிற்கு வந்த தாய் தனது மகளை அழைத்து சென்று காலி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பொருத்தமான சிறுவர் இல்லம் ஒன்றை கண்டறியுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை அந்த சிறுமியை காலி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
17 முறை சீரழிக்கப்பட்ட சிறுமி - காலியில் பதிவாகிய அதிர்ச்சி சம்பவம் 17 முறை சீரழிக்கப்பட்ட சிறுமி - காலியில் பதிவாகிய அதிர்ச்சி சம்பவம் Reviewed by Vanni Express News on 5/08/2018 05:58:00 PM Rating: 5