குடும்ப தகராறு தற்கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளியானது

ரிதிகம - கிரிபத்கல்ல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவியின் சடலங்களை காவல்துறை நேற்று (8) மீட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கணவன்
வீட்டினுள் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் இருந்த மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப தகராறு அதிகரித்து இந்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, 29 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவர் 34 வயதான நபர் ஆகும்.

இவர்கள் இருவருக்கும் 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்ப தகராறு தற்கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளியானது குடும்ப தகராறு தற்கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளியானது Reviewed by Vanni Express News on 5/09/2018 03:18:00 PM Rating: 5