திருமணத்திற்கு பின் என் கோபம் ரொம்பவே குறைந்துவிட்டது - சமந்தா

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவர் வீட்டின் சம்மதத்துன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கை குறித்து சமந்தா வாய் திறந்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய சமந்தா, “ திருமணத்திற்கு பின் வாழ்க்கையே மாறிவிட்டது. என் கோபங்கள் எல்லாம் இப்போது ரொம்பவே குறைந்துவிட்டது. 

எங்களுக்கு இடையில் பிரச்னை வந்தால் கூட ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்து பேசி அதனை எளிதாகவே தீர்த்துவிடுவோம். என் வாழ்க்கை இப்போது மிக சந்தோஷமாக செல்கிறது” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின் என் கோபம் ரொம்பவே குறைந்துவிட்டது - சமந்தா திருமணத்திற்கு பின் என் கோபம் ரொம்பவே குறைந்துவிட்டது - சமந்தா Reviewed by Vanni Express News on 5/06/2018 11:35:00 PM Rating: 5