இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார ?

சமகால அரசியல் தற்போது அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை எதிர் நோக்கி நகரும் பரபரபரப்பான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமான குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களத்தில் முன்னிறுத்த ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் குழு ஒன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட உள்ளபோது அவருக்கு சமமான ஒரு போட்டியாளரை களமிறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளப்பட்டுள்ளதால் சங்கக்காரவை தேர்தல் களத்தில் நிறுத்த கட்சியில் பெரும்பாலானவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, பெரும்பான்மையின வாக்குவங்கிகள் மட்டுமல்லாது, தமிழ், முஸ்லிம் என்ற சிறுபான்மையினரின் வாக்குகளும் சங்கக்காரவிற்கு இலகுவாக கிடைக்கும் எனவும் ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஏற்கனவே சங்கக்கார கிரிக்கெட் ஓய்வின்போது அரசியலில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற யோசனையை சங்கக்கார நிராகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரை எவ்வாறாவது அரசியல் களத்தில் கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார ? இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஜாம்பவான் சங்கக்கார ? Reviewed by Vanni Express News on 5/19/2018 11:42:00 PM Rating: 5