தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி

தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்த, 104 வயதான விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக ரைட் டு டை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

நோய்வாய்படவில்லை என்றாலும் வாழ்க்கை தரம் மோசமடைவதால், தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். லண்டனில் பிறந்த டேவிட் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். 

"வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி" என்று தான் உயிரை விடுவதற்கு சிறிது நேரம் முன்பு அவர் தெரிவித்தார். 

இதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் அவர் சுவிட்ஸர்லாந்த் சென்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.
தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி Reviewed by Vanni Express News on 5/11/2018 05:01:00 PM Rating: 5