அமெரிக்கா பறக்கும் இலங்கையின் இளம் விஞ்ஞானிகள்

-க.கிஷாந்தன்

அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு (13.05.2018 முதல் 18.05.2018 வரை) இலங்கை பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகள் 4 பேர் அமெரிக்கா பயணமாகின்றார்கள்.

இவர்களுக்கான பயணச்சீட்டு கல்வி அமைச்சின் மூலமாக வழங்கி வைக்கப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை பயணச்சீட்டுகளை கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார். இதன்போது கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியும் உடன் இருந்தார்.

அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை பெனின்சுலா நகரில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சோந்த 1700 மாணவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

2007ம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்கள் தொடாச்சியாக இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன் இதன்போது அவர்கள் அங்கு நடைபெறுகின்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இலங்கை பொறியியலாளர் கல்வியகம் வருடங்தோறும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களை தெரிவு செய்து இரண்டு கட்டமாக போட்டிகளை நடாத்துகின்றன. இந்த போடடிகளில் பங்குபற்றி வெற்றி பெறுகின்ற மாணவர்களை வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த வருடமும் தெரிவு செய்யப்பட்டு பங்குபற்றுகின்றார்கள்.

கிம்ஹான் விஜேவர்தன (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) கஜிந்து பண்டார (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) சுபுன்சில்வா (டெமகினோன் கல்லூரி கந்தானை) ருமல் இந்துவர (ஆனந்த தேசிய கல்லூரி புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களே இந்நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் எதிர்வரும் 12.05.2018 அன்று இலங்கையில் இருந்து பயணமாகின்றார்கள். கண்காட்சி தொடர்ந்து ஜந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பறக்கும் இலங்கையின் இளம் விஞ்ஞானிகள் அமெரிக்கா பறக்கும் இலங்கையின் இளம் விஞ்ஞானிகள் Reviewed by Vanni Express News on 5/09/2018 03:41:00 PM Rating: 5