இப்படியும் மோசடிகள் நடக்கிறது - வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம்

சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. 

வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை சமுக வலைத்தள குழுக்களில் இணைத்துக் கொண்டு, பல்வெறு திட்டங்களுக்கு பணம் சேகரிப்பதாக கூறி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த மோசடி சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிடுமாறும், முறையீட்டாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
இப்படியும் மோசடிகள் நடக்கிறது - வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம் இப்படியும் மோசடிகள் நடக்கிறது - வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம் Reviewed by Vanni Express News on 5/02/2018 05:03:00 PM Rating: 5