தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு முன்னர் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை நடவடிக்கைகள் சட்ட மா அதிபரால் நிறைவு செய்யப்பட்டிருந்தது. 

அதன்படி பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைக்காமல் வழக்கிலிருந்து தேரரரை விடுதலை செய்ய முடியும் என்று பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். 

எனினும் பிரதிவாதிகளின் சாட்சிகளை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன தெரிவித்தார். 

இந்நிலையில் பிரதிவாதிகளின் சாட்சி பட்டியலை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை அழைக்க உத்தரவு Reviewed by Vanni Express News on 5/11/2018 04:32:00 PM Rating: 5