சிக்கலில் சிக்கிய ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். 

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (24) கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிக்கலில் சிக்கிய ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் சிக்கலில் சிக்கிய ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் Reviewed by Vanni Express News on 5/24/2018 10:24:00 PM Rating: 5