ஜனாதிபதிக்கு பதவி மோகம் உள்ளது - இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவருக்கு பதவி மோகம் உள்ளது. அவர் 2020 இலும் ஓய்வு பெறுவதில்லை எனக் கூறியுள்ளார். இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா. இது போன்ற பணிகள் என்றால் இதன்பிறகும் வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற அக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதி கதிரையில் யார் அமர்ந்தாலும் அதனை போட்டுவிட்டுச் செல்ல மாட்டார். இது ஜனநாயகத்துக்கு பாரிய அடியாகும். நாம் ஆரம்பித்த போராட்டத்தை இலகுவில் கைவிட மாட்டோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 
ஜனாதிபதிக்கு பதவி மோகம் உள்ளது - இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா ? ஜனாதிபதிக்கு பதவி மோகம் உள்ளது - இவ்வளவு காலமும் செய்த பணிகள் போதாதா ? Reviewed by Vanni Express News on 5/07/2018 11:53:00 PM Rating: 5