தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம்

-க.கிஷாந்தன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டமும், பேரணியும் தலவாக்கலை நகரில் இன்று இடம்பெற்றது.

தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான தமிழ் முற்போக்கு கூட்டணியின்  மேதின பேரணி தொடர்ந்து தலவாக்கலை நகரசபை மைதானத்தில் மேதினக்கூட்டமாக நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், திலகராஜ், வேலுகுமார் கட்சியின் மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் Reviewed by Vanni Express News on 5/07/2018 04:05:00 PM Rating: 5