டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய இலக்கங்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது. 

இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது. இருப்பினும் பாதுகாப்புக்காக இரகசிய இலக்கங்கத்தை மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து பயனாளர்களையும் டுவிட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

அந்த கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் இனிமேல் இது போல் நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள் டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 5/04/2018 03:44:00 PM Rating: 5