வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டவரும் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர் பிரயோகம்

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டவரும் ஆர்ப்பாட்டத்தின் மீதே இந்த தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கபடுகின்றது. 

2012 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆண்டுவரையான 6 வருட காலப்பகுதிக்குள் 57,000 இற்கும் அதிகமான வேலையில்லாத பட்டதாரிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கததலும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நிலமையில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டவரும் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர் பிரயோகம் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டவரும் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர் பிரயோகம் Reviewed by Vanni Express News on 5/08/2018 04:20:00 PM Rating: 5