வாகனங்களின் விலைகள் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது

புதிய வரி முறைமைக் காரணமாக வாகனங்களின் விலைகள் இரு மடங்காக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிஹான் பிலபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வாகனத்தின் எஞ்சினின் (இயந்திரம்) தன்மைக்கு ஏற்பவே வரி அறவிடப்பட்டதாகவும், எனினும் தற்போது படிப்படியாக வரிகள் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, கொரியா மற்றும் ஜப்பான் வாகனங்களில் விலைகளே அதிகரிக்குமெனவும், ரூபாயின் பெறுமதி குறைந்துகொண்டே செல்வதும் இதற்கு மற்றுமொருக் காரணமெனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனிய மற்றும் பிரித்தானிய வாகனங்கள் இலங்கையின் வீதிக்கட்டமைப்புக்கு ஏற்றதல்ல எனவும், அவைகளுக்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வது கடினம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாகனங்களின் விலைகள் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது வாகனங்களின் விலைகள் இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது Reviewed by Vanni Express News on 5/28/2018 05:17:00 PM Rating: 5