தென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

அதேநேரம் தற்போது இந்த நிலமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

சுகாதாரக் குழுக்கள், மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இனம் காணப்படாத வைரஸ் தொற்று காரணமாக தென் மாகாணத்தில் அண்மைய நாட்களில் 07 சிறுவர்கள் உயிரிழந்திருந்த நிலையில், அது இன்புளுவன்ஸா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இரண்டு கைகளையும் சவர்க்காரமிட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறும், சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை நாடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

02 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் நபர்கள் மற்றும் வயது வந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள் தென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள் Reviewed by Vanni Express News on 5/22/2018 11:24:00 PM Rating: 5