பாராளுமன்ற சுற்றுவட்டப்பாதையில் பாரிய வாகன நெரிசல்

பாராளுமன்ற நுழைவாயிற்கருகில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தனர்.

இதனை வரவேற்க குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , தற்போதைய நிலையில் குறித்த நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகட காவற்துறையினர் தெரிவித்தனர்.
பாராளுமன்ற சுற்றுவட்டப்பாதையில் பாரிய வாகன நெரிசல் பாராளுமன்ற சுற்றுவட்டப்பாதையில் பாரிய வாகன நெரிசல் Reviewed by Vanni Express News on 5/08/2018 04:30:00 PM Rating: 5