நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும்

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை (04) முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பிலிருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும் நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும் Reviewed by Vanni Express News on 5/03/2018 05:21:00 PM Rating: 5