சீரற்ற காலநிலை - நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்கவும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

ஊடக மற்று நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வசதியாக தேவைப்படுகின்ற நிதியை வழங்குவதற்கு திறைசேரி அதிகாரிகளுக்கு அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட மட்டத்தில் நிவாரணம் வழங்குவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களால் கேட்கப்படுகின்ற அளவு பணத்தை உரிய பகுதிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடக மற்று நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலை - நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்கவும் சீரற்ற காலநிலை - நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்கவும் Reviewed by Vanni Express News on 5/22/2018 10:50:00 PM Rating: 5