நாடு முழுவதும் இன்று இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழை பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும் 75 மில்லிமீட்டர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

இன்று நண்பகல் 12.00 மணிக்கு வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும், அதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் கடல் அலையில் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும் என்றும், புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசங்களில் கடல் அலைகள் 2 - 2.5 மீட்டர் உயரத்திற்கு எழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலை எதிர்வரும் 15ம் திகதி வரை காணப்படலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் வௌியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று இடியுடன் கூடிய மழை நாடு முழுவதும் இன்று இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 5/12/2018 05:44:00 PM Rating: 5