அடை மழை காரணமாக மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது

பஸ்ஸர - கனவரெல்ல பகுதியில் பெய்த அடை மழை காரணமாக அப்பகுதியில் உள்ள மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது. 

இந்த மண்சரிவினால் விசாலமான கருங்கல் ஒன்றும் சரிந்து கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இன்று (15) காலை முதல் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்தை அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் ஏனைய 14 குடும்பங்களையும் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுள்ளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம் உதய குமார தெரிவித்துள்ளார். 

அப்பகுதிக்கு கடந்த 24 மணித்தியாளங்களாக 125 மில்லி மீற்றர் மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடை மழை காரணமாக மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது அடை மழை காரணமாக மண்மேடு சரிவதற்கு ஆரம்பித்துள்ளது Reviewed by Vanni Express News on 5/15/2018 10:35:00 PM Rating: 5