கடும் மழை - பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - மக்கள் அவதானத்தில்

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை கலாவெவ நீர்த்தேக்கத்தினதும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் மழை - பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - மக்கள் அவதானத்தில் கடும் மழை - பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - மக்கள் அவதானத்தில் Reviewed by Vanni Express News on 5/16/2018 11:23:00 PM Rating: 5