சீரற்ற காலநிலை - மரணமடைந்த நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார கூறியுள்ளார். 

அதேவேளை வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்காக ஒரு வீட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்தத்திற்கு பின்னரான திட்டமிடல் சம்பந்தமாக இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார். 

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்ட ஈடு வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்துவது சம்பந்தமாக இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான வைத்திய சேவை குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. 

இதுதவிர பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு 10 மில்லியன் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை - மரணமடைந்த நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு சீரற்ற காலநிலை - மரணமடைந்த நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு Reviewed by Vanni Express News on 5/23/2018 11:12:00 PM Rating: 5