வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் சென்று செல்பீ எடுப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை பார்வையிடச் செல்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் சென்று செல்பீ எடுப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் களியாட்டங்களையோ அல்லது பொழுது போக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதனை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் அதுல ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லுதல், செல்பீ எடுத்தல், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், மதுபானம் அருந்துவிட்டு அந்த இடங்களுக்கு செல்லுதல் என்பவை ஆபத்தானது என கொழும்பு ஊடகங்களின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் சுமார் 20 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 32500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் சென்று செல்பீ எடுப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில் சென்று செல்பீ எடுப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள் Reviewed by Vanni Express News on 5/26/2018 05:40:00 PM Rating: 5