சீரற்ற காலநிலை எலி காய்ச்சல் பரவும் அபாயம்

சீரற்ற காலநிலையை அடுத்து எலி காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் வெள்ள நீர் தேங்கி நிற்க்கும் பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் சுத்தம் செய்த பின் வீடுகளுக்குச் செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் உதவி தேவைப்படும் பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக, 011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நீர்த் தாங்கிகளை சுத்தம் செய்யுமாறும் கொதித்தாரிய நீரை மாத்திரம் அருந்துமாறும் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, வெள்ளத்திற்குட்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சீரற்ற காலநிலை எலி காய்ச்சல் பரவும் அபாயம் சீரற்ற காலநிலை எலி காய்ச்சல் பரவும் அபாயம் Reviewed by Vanni Express News on 5/28/2018 11:18:00 PM Rating: 5