அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை , களுத்துறை , பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி இதன்போது பதிவாகக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , மன்னார் தொடக்கம் புத்தளம் , கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை பெய்யகூடும் எனவும் , குறித்த சந்தர்ப்பத்தில் காற்று 70-80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இடிமின்னல் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

இதற்கிடையில் ஹபுத்தளையில் பெய்யும் கடும் மழையின் காரணமாக, கல்கந்தை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு 14 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அங்குள்ள பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை அடுத்த சில மணி நேரங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை Reviewed by Vanni Express News on 5/08/2018 11:17:00 PM Rating: 5