நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற அனர்த்தங்களாலேயே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் எத்தகைய அனர்த்த நிலையையும் எதிர்கொள்வதற்கு முப்படையினரும், பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் பலி நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் பலி Reviewed by Vanni Express News on 5/21/2018 02:12:00 PM Rating: 5