நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின்போது சில பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த நிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை Reviewed by Vanni Express News on 5/04/2018 05:54:00 PM Rating: 5