நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான, ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின்போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அதேவேளை தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை Reviewed by Vanni Express News on 5/22/2018 03:22:00 PM Rating: 5