சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் களத்தில்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

அதனடிப்படையில் இலங்கை கடற்படையினரால் 27 குழுக்கள் தற்போது காலி, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் டிங்கி படகு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேனை இலங்கை இராணுவத்தினரின் 115 பேர் 4 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் 25 பேர் கொண்ட குழு ஒன்று காலி மாவட்டத்திற்கும், 30 பேர் கொண்ட குழு ஒன்று இரத்தினபுரி மாவட்டத்திற்கும், 40 பேர் கொண்ட குழு ஒன்று களுத்துறை மாவட்டத்திற்கும் மற்றும் 20 பேர் குழு ஒன்று மாத்தறை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் விமானப்படையினர் மற்றும் விமானங்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் களத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் களத்தில் Reviewed by Vanni Express News on 5/21/2018 02:53:00 PM Rating: 5