மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த 48 மணிநேரத்தில் பல்வேறு மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. 

ஹல்துமுல்ல வீதியின் பல பகுதிகளிலும் ஹப்புத்தளை பேரகல, பதுள்ளை எல்ல - வெல்லவாய வீதிகளிலும் மண்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் ஹப்புத்தளை வீதியில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் மண்சரிவு அபாயம் இருப்பதனால் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 5/08/2018 05:21:00 PM Rating: 5