அத்தனகலு ஓய பெருக்கெடுக்கும் அபாயம் - அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானம்

அத்தனகலு ஓய பெருக்கெடுத்துள்ள நிலையில் தற்போது அது வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

இதனால் நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

இதேவேளை, மா ஓயவின் நீர் மட்டம் வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாகவும் இதனால் படல்கம மற்றும் கிரிஉள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தனகலு ஓய பெருக்கெடுக்கும் அபாயம் - அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானம் அத்தனகலு ஓய பெருக்கெடுக்கும் அபாயம் - அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானம் Reviewed by Vanni Express News on 5/25/2018 11:25:00 PM Rating: 5