புத்தளம் மாவட்டத்தில் கடும்மழை - தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் இன்று (25) அதிகாலை திறக்கப்பட்டுள்ளதென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ‍

இதனால் தப்போவ நீர்த்தேக்கத்தில் இருந்து நிமிடமொன்றுக்கு 5,750 கன அளவு நீர் வெளியேற்றப்படுகின்றது. ‍( 3 வான்கதவுகள் 3 அடி வீதத்திலும், 8 வான் கதவுகள் 1 அடி வீதத்திலும் மற்றும் 6 வான்கதவுகள் 6 அங்குலத்திலும் திறக்கபட்டுள்ளது)

இதன் காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) தப்போவ நீர்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் கடும்மழை - தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு புத்தளம் மாவட்டத்தில் கடும்மழை - தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு Reviewed by Vanni Express News on 5/25/2018 05:43:00 PM Rating: 5