25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை

போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக சட்ட வரைவு திணைக்களத்திற்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. 

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக, சட்ட வரைவு திணைக்களத்தால் திருத்தங்கள் செய்யப்பட்டு போக்குவரத்து அமைச்சுக்கு சமர்பிக்கப்படும் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சர் கையொப்பமிட்ட பின்னர் வர்த்தமானியில் வௌியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. 

07 வகையான போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன், அதற்காக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை கூறத்தக்கது.
25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை Reviewed by Vanni Express News on 6/30/2018 11:04:00 PM Rating: 5