வவுனியாவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை பொலிசாரால் கண்டுபிடிப்பு

வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் இருந்து கடத்தப்பட்டிருந்த 8 மாத குழந்தையை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இரண்டு பெண்களிடம் இருந்து குறித்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 31 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

வசுதரன் வானிஷன் என்ற குழந்தையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு இரண்டு மணிளவில் வேன் ஒன்றில் வந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து கடத்திச் செல்லப்பட்ட 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் இருப்பதாக கேப்பாபுலவு விமானப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையை தாயிடம் பொலிஸ் அதிகாரிகள் கையளித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
வவுனியாவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை பொலிசாரால் கண்டுபிடிப்பு வவுனியாவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை பொலிசாரால் கண்டுபிடிப்பு Reviewed by Vanni Express News on 6/03/2018 12:26:00 AM Rating: 5